கண்களை இழந்த ஈழத்தமிழருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த S.P.B: வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

Report Print Santhan in பொழுதுபோக்கு

உயிரிழந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஈழத்தமிழர் ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவரை நேரில் சந்தித்து பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கடந்த 5-ஆம் திகதி உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று மதியம் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரின் உடல் இப்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதன் பின் அவரின் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், எஸ்.பி.பியின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், கண்களை இழந்த நபருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நேரில் சென்று எஸ்.பி.பி சந்திக்கிறார்.

அந்த வீடியோ குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ஈழத்தமிழர்கள் எப்போதும் ஒரு வித மரியாத, அர்பணிப்பை கொண்டவர் எஸ்.பி.பி.

கடந்த 2016-ஆம் ஆண்டு இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு வந்த போது, அவர் தங்கள் ரசிகர்களை ஈழத்தில் சந்திக்க முடிந்ததை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியிருந்தார்.

மேலும், அவர், 50 ஆண்டுகளில் பாடியதில் நான் யாழ்ப்பாணத்திற்கு வருவது இதுவே முதல் முறை என்று நான் நினைக்கும் போது, ​​எனக்கு வேதனையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. கடவுள் இறுதியாக எனக்கு அந்த வாய்ப்பை வழங்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

அப்போது, அங்கு கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்திய அவர், இப்போது எங்களுடன் நீங்கள் இல்லை ஆனால் மேலே இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள், காயமடைந்த இதயங்களுக்கு ஒரு சிறிய சிகிச்சையை வழங்க நான் இங்கு வந்துள்ளேன் என்று கூறினார்.

ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்ட எஸ்.பி.பியின் அர்பணிப்பு இதோடு நிற்கவில்லை, கடந்த ஆண்டு மலேசியாவில் ரசிகர் ஒருவரை நேரில் பார்த்து ஆச்சரியப்படுத்தினார்.

மதிமாறன் என்றழைக்கப்படும் அந்த ஈழத்தமிழர் இலங்கையில் குண்டு வெடிப்பில் காயமடைந்தார். அதன் பின் அங்கிருந்து வெளியேறிய அவர், தொடர் சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.

அந்த சமயத்தில் அவருக்கு பெரும் ஆறுதலாக பாலசுப்ரமணியத்தின் பாடல்களே இருந்துள்ளன. ஆனால் அவரது இரு கண்களில் பார்வை போனது.

இதுகுறித்து சமூக வலைதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள மாறன், எஸ்பிபியையும் அவரது குரலின் மந்திரத்தை பற்றியும் புகழ்ந்து பேசியுள்ளார்.

அப்போது எதிரில் இருந்த நபர் பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களில் பிடித்த பாடலை பாடுமாறு கேட்டார். உடனே மாறன், மனைவி ஒரு மந்திரி படத்தில் இடம்பெற்ற'சின்ன புறா ஒன்று என்கிற பாடலை பாட ஆரம்பித்தார்.

திரைமறைவில் இதனை கேட்டுக்கொண்டிருந்த பாலசுப்ரமணியம், அவர் பாடி கொண்டிருக்கும் போதே ஆச்சர்யம் அளிக்கும் வகையில், அந்த பாடலின் மீதியை பாட ஆரம்பித்தார்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்