பாடலாசிரியரும், நடிகருமான சினேகன் கார் மோதி படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக உள்ளவர் சினேகன். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சினேகனுக்கு அந்நிகழ்ச்சி இன்னும் அதிகமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.
மேலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் மாநில இளைஞரணி செயலாளராகவும் உள்ளார் சினேகன்.
கடந்த 16ஆம் திகதி சினேகன் புதுக்கோட்டை மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது காரானது சாலையில் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அந்த பைக்கை ஓட்டி சென்ற அருண்பாண்டின் என்பவர் தலையில் பலத்த காயமடைந்து சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அருண்பாண்டியன் உயிரிழந்தார்.
இதையடுத்து சினேகன் மீது கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் மற்றும் விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அருண்பாண்டியன் உயிரிழந்துள்ளதால் சினேகன் கைதாராவா என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.