பிக்பாஸ் அனிதாவின் தந்தை திடீர் மரணம்! ஆசையுடன் வெளியேறிய நிலையில் நடந்த சோகம்

Report Print Santhan in பொழுதுபோக்கு
1608Shares

பிக்பாஸ் அனிதாவின் தந்தை தீடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததால், அவரது குடும்பத்தினர் கடும் சோகத்தில் உள்ளனர்.

தமிழில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் செய்தி வாசிப்பாளர் அனிதா. ஏற்கனவே செய்தி வாசிப்பின் மூலம் பிரபலமான அனிதாவிற்கு, இந்த பிக்பாஸ் நல்ல ஒரு வாய்ப்பாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவருக்கு இருந்த ரசிகர்கள் பட்டாளம் மேலும் கூடியது.

இந்நிலையில், கடந்த வாரம் அனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். வெளியேறுவதற்கு முன் அவர் கமலிடம் நான் இந்த புத்தாண்டை என் குடும்பத்தினருடன் கொண்டாட ஆசைப்படுகிறேன், அதனால் நான் வெளியில் சென்றால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

அதே போன்று வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் அனிதாவின் அப்பா இன்று மாரடைப்பால் திடீரென உயிரிழந்துள்ளார். புத்தாண்டை குடும்பத்தினருடன் கொண்டாட ஆசையுடன் வெளியேறிய அனிதாவிற்கு, அவரின் தந்தை மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்