பிரபல முன்னணி திரைப்பட நடிகர் காலமானார்! கண்ணீரில் சக நடிகர், நடிகைகள்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
878Shares

500க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள மூத்த நடிகர் மகாதேவப்பா கொரோனா பாதிப்பால் காலமானார்.

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மகாதேவப்பா. இவர் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மகாதேவப்பா நடித்த சங்கர் குரு, கவிரத்னா காளிதாசா, குரு பிரம்மா ஆகிய படங்கள் பெரிய வெற்றி பெற்றன. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருடன் இணைந்து அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

மகாதேவப்பாவுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் மகாதேவப்பா உடல்நிலை மோசம் அடைந்து சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. மகாதேவப்பாவுக்கு மனைவியும் மகனும் மகளும் உள்ளனர். அவரது மறைவு சக நடிகர், நடிகைகளை கண்ணீரில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்