ஸ்பெய்னுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு

Report Print Thayalan Thayalan in ஐரோப்பா
ஸ்பெய்னுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு
83Shares
83Shares
lankasrimarket.com

ஸ்பெய்னில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு தாம் ஆதரவளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உப தலைவர் Valdis Dombrovskis தெரிவித்துள்ளார்.

கதலோனிய விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இன்று புதன்கிழமை கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஸ்பெய்னின் தற்போதையை நிலைமையை ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் கூர்ந்து கவனித்து வருகின்றது. அத்துடன், ஸ்பெய்னின் அரசியலமைப்பை நாம் மதிக்கின்றோம்.

எனவே, ஸ்பெய்னில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்த்து அங்கு ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு நாம் பக்கபலமாக இருப்போம்’ எனக் கூறியுள்ளார்.

ஸ்பெய்னிலிருந்து கதலோனியா சுதந்திரம் பெற்று தனி நாடாகும் ஒப்பந்தத்தில் கதலோனியத் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் மற்றும் ஏனைய அதிகாரிகளும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

இருப்பினும், ஸ்பெய்ன் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும்வரை சில வாரங்களுக்கு இதை அமுல்படுத்துவதை நிறுத்திவைப்பதாக கதலோனியத் தலைவர் அறிவித்துள்ளது நினைவு கூறத்தக்கது.

இதனை அடுத்தே, ஐரேப்பிய ஒன்றியத்தின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்