35,000 அடி உயரத்தில் ஒரு காதல்; நடுவானில் கலங்கிய பெண்

Report Print Gokulan Gokulan in ஐரோப்பா

இத்தாலியிலிருந்து துபாய் நோக்கி சென்று கொண்டிருந்து விமானத்தில் பயணி ஒருவர் பணிப்பெண்ணிடம் வித்தியாசமான முறையில் காதலை பரிமாறிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

இத்தாலி நாட்டை சேர்ந்தவர் ஸ்டிபானோ, இவரது தோழி விக்டோரியா. இருவரும் நெடுகாலமாக நண்பர்களாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்டிபானோ விக்டோரியாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.

விக்டோரியா விமான பணிப்பெண்ணாக இருந்ததால் அவரிடம் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்த நினைத்த ஸ்டிபானோ, நடுவானில் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

விமானத்தினுள் சென்றதும் பயணிகளிடம் தான் ஒரு பணிப்பெண்ணை காதலிப்பதாகவும் அதை வெளிப்படுத்த அனைவரும் உதவுமாறும் கேட்டு கொண்டுள்ளார். இதை கண்டு அனைத்து பயணிகளும் உதவ முன்வந்தனர்.

விமானத்தினுள் பல பிரிவுகள் இருக்கும் என்பதால் விக்டோரியா மற்றொரு பிரிவில் இருக்கும் போது, ஸ்டிபானோ தான் இருக்கும் பகுதியில் அனைவரிடமும் இதயவடிவிலான அலாங்கார பொருட்கள் மலர்கள், புகைப்படங்கள் வழங்கினார்.

தொடர்ந்து அனைவரும் வாழ்த்த அவர் தன் காதலை முழங்காலிட்டு வெளிப்படுத்த, முதலில் அதிர்ந்து போன விக்டோரியா பின் அழுதவாறே காதலை ஏற்றுக் கொண்டார். கிட்டத்தட்ட தரையிலிருந்து 35,000 அடிக்கு மேல் இருவரும் நிச்சயம் செய்து கொண்டுள்ளனர்.

தற்போது அந்த விமான நிறுவனம் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்