விமானப் பணிப்பெண்ணுடன் தற்செயலாக செய்த தவறு.. பிரித்தானியருக்கு நேர்ந்த கதி: வீடியோ வெளியானது

Report Print Basu in ஐரோப்பா

போர்ச்சுகலில் இருந்து லண்டன் திரும்ப விமானத்தில் ஏறிய பிரித்தானியர்கள், அந்நாட்டு பொலிசாரால் முரட்டுத் தனமாக இழுத்து விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனை சேர்ந்த 20 வயதான ரபிக் பூடிச் என்ற இளைஞரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். ரபிக்கும், அவரது நண்பர் 19 வயதான இஸலாம் ஃபெசிஹ் இசை நிகழ்ச்சிக்காக போர்ச்சுகல் சென்றுள்ளனர்.

நிகழ்ச்சி முடிந்து லண்டன் திரும்ப, அல்கார்வில் உள்ள ஃபோரோ விமான நிலையத்தில் ரயன் ஏர் விமானத்தில் ஏறியுள்ளனர். விமானத்தில் பல இருக்கைகள் காலியாக இருந்ததால், ரபிக், இஸ்லாமிற்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளார்.

இதைக்கண்ட விமானப் பணிப்பெண், ரபிக்கை பின்னால் இருக்கும் அவரது இருக்கையில் சென்று அமரும் படி கூறியுள்ளார். ரபிக் எழுந்து செல்லும் போது பணிப்பெண் மீது தற்செயலாக மோதியுள்ளார்.

இதனால், கோபமடைந்த பணிப்பெண் பொலிசாருக்கு அழைப்பு விடுத்துள்ளார். உடனே விமானத்திற்குள் வந்த பொலிசார் ரபிக்கை முரட்டுத் தனமாக இழுத்து விமானத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

ரபிக் தன்னைத் தள்ளியதாக பொலிசாரிடம் விமானப் பணிப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டை ரபிக் கடுமையாக மறுத்துள்ளார். பொலிசார், முரட்டுத் தனமாக நடந்துக்கொண்டதில் ரபிக்கிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. ரபிக் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட வீடியோவை இஸ்லாம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பொலிசார் ரபிக்கை இழுக்கும் போது, பல பயணிகள் நீங்கள் அவரை துன்புறுத்தும் வகையில் இழுக்கிறீர்கள் என எச்சரித்துள்ளனர்.

விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், பிரித்தானியா நண்பர்கள், போர்ச்சுகலில் மற்றொரு இரவு தங்க வேண்டியிருந்தது. இதனையடுத்து, மற்றொரு விமான நிறுவனத்தின் விமானத்தில் இருவரும் லண்டன் பயணித்துள்ளனர். பொலிசாரின் முரட்டுத் தனமான செயலுக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்