150 அடி உயரத்திலிருந்து பேஸ் ஜம்பிங்.. நேராக தரையில் மோதி சாகச வீரர் பலி: வெளியான திடுக் காரணம்

Report Print Basu in ஐரோப்பா

ஐரோப்பா நாடான ஸ்பெயினில் பல சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டு யூடியூப் மூலம் பிரபலமடைந்த ரூபன் கார்பனெல், பேஸ் ஜம்பிங் போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யூடியூப் பிரலம் 29 வயதான ரூபனும் அவரது நண்பரும், ஸ்பெயினில் உள்ள சிமென்ட் தொழிற்சாலையின் 150 அடி உயர சிம்னி மீது இருந்து பேஸ் ஜம்பிங் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு திட்டமிட்டுள்ளனர்.

அதன் படி சிம்னி மீது இருவரும் ஏறியுள்ளனர், முதலில் ரூபன் பேஸ் ஜம்பிங் செய்துள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக நடுவானில் ரூபனின் பாராசூட் திறக்காமல் சிக்கியுள்ளது, இதனால், அவர் நேராக தரையில் மோதி நிலைகுலைந்து உள்ளார்.

இதில், படுகாயமடைந்த ரூபன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார். ரூபன் உடனிருந்த நண்பர் அளித்த தகவலை அடுத்து அவசர உதவி குழுவினர் மற்றும் பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். இருவரும் சிமென்ட் தொழிற்சாலைக்குள் நுழைந்து சிம்னி மேலே ஏற முடிந்தது எப்படி என்பது குறித்து பொலிசார் விசாரணை நடந்து வருகின்றனர்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்