வெகுசிறப்பாக நடைபெற்ற சுந்தரேஸ்வரன் ஆலய சங்காபிசேக நிகழ்வு

Report Print Yathu in நிகழ்வுகள்
34Shares
34Shares
lankasrimarket.com

யாழ் வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தெற்குக் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான அருள் மிகு அண்ணாமார் சிவகாமி சமேத சுந்தரேஸ்வரன் ஆலயம் சங்காபிசேக நிகழ்வு நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது.

யாழ். வடமாராட்சி கிழக்கு மருதங்கேணி செம்பியன்பற்றுத் தெற்கில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த மேற்படி ஆலயம் கடந்த கால யுத்தம் காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்டு வழிபாடுகளற்ற நிலையில் காணப்பட்டது.

மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த ஆலயத்திற்கு கிராம மக்களாலும் அப்பகுதி இளைஞர்களாலும் மிகக்குறுகிய காலத்தில் நிரந்தரக் கட்டடம் அமைக்கப்பட்டன.

கடந்த 30ம் திகதி கிரியா பூசைகளுடன் ஆரம்பமாகி, 31ம் திகதி எண்ணைக் காப்புச் சாற்றப்பட்டு, 1ம் திகதி கும்பாபிசேகம் நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து மேற்படி அண்ணாமார் சிவகாமி அம்பாள் சமே சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் சங்காபிசேக நிகழ்வு காலை 8.00 மணிக்கு விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளன.

கிளிநொச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் பிரதம குரு பிரதிஸ்ராபிரதம குரு சாமசிறி தேசமானிய நாகநாத சிவகலாநிதி சிவசிறி சிறிஸ்கந்தராஜ குருக்கள் தலமையில் சங்காபிசேக நிகழ்வுகள் நடைபெற்றன.

இதில் பெருமளவான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்