யாழில் இடம்பெற்ற சமூக சேவையாளர் ஆ.சி.நடராஜாவின் ஆறாவது சிரார்த்த தினம்

Report Print Thamilin Tholan in நிகழ்வுகள்
34Shares
34Shares
ibctamil.com

வலி.வடக்கு மீள் குடியேற்றச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபருமான ஆ.சி.நடராஜாவின் ஆறாவது சிரார்த்த தினம் யாழ். குரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் இன்றைய தினம்(26) இடம்பெற்றது.

குரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ். தங்கராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

நிகழ்வில் மாணவர் கௌரவிப்பு, முதியோர் கௌரவிப்பு என்பன இடம்பெற்றதுடன், இறுதி யுத்தத்தில் குடும்பத்தை இழந்த பெண்ணொருவருக்கு புலம்பெயர் குரும்பசிட்டி உறவுகளின் உதவியுடன் வாழ்வாதாரமாக ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் நினைவுப்பேருரை ஆற்றியுள்ளார்.

இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினருடன் வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் முகுந்தன், வலி.வடக்குப் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சோ.சுகிர்தன், குரும்பசிட்டிக் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பயனாளிகள், மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்