அழகில் யாருக்குதான் நாட்டமில்லை, சீனாவில் “காஸ்மெடிக் சர்ஜரி” எனும் அழகுக்கலை மீது மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதால் சீன வணிகர்களுக்கு பணத்தை அள்ளித்தரும் தொழிலாக இந்த அழகுக்கலை மாறியுள்ளது.
இந்த காஸ்மெடிக் சர்ஜரியினை செய்து கொள்வதால் மிகுந்த சந்தோஷத்தினை உணர்வதாகவும் அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சையின் மூலம் தமது அழகினை மேம்படுத்துவது தொடர்பில் அங்குள்ள மக்கள் மிகவும் விருப்பு தெரிவித்துள்ளதோடு இத்தொழிலின் மூலம் கடந்த வருடம் மட்டும் 77 பில்லியன் டொலர் வருமானம் கிட்டியுள்ளது.
மேலும் இந்த அழகுகலை பிரபலங்களுக்கான ஒன்றே என்ற எண்ணமும் தற்போது மக்கள் மத்தியில் மாறி வருவதுடன்கடந்த வருடத்தில் மாத்திரம் 70% அதிகமான மக்கள் இந்த சிகிச்சையை பெற்றுள்ளதாக கருத்துகணிப்பு கூறுகின்றது.
மேலும் இது ஒவ்வொரு வருடமும் 15% அதிகரிக்கும் என்பதால் 2019ல் இந்த வருவாய் பல மடங்கு உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
முகம் அழகு பெறுவதால் நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை ஏற்படும் என்ற எண்ணத்தில், இள வயதுக்காரர்கள் கூட இந்த சிகிச்சையை செய்து கொள்வதாக அழகுகலை மேலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இருந்தும் இந்த சிகிச்சையில் தரம் தொடர்பாக தயங்கும் சில சீன வாடிக்கையாளர்கள் தென் கொரியாவிற்கு சென்று இது போன்ற அறுவை சிகிச்சைகளை செய்துக்கொள்கின்றனர் என்ற கருத்தும் நிலவிவருகின்றது.