அம்பானி மகள் இஷாவுக்கு தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஜாக்கெட்டை பரிசாக அளித்த மாமியார்

Report Print Deepthi Deepthi in நவீன அழகு

உலக கோடீஸ்வர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி-ஆனந்த் பிராமல் திருமணம் உலகமே வியக்கும் அளவுக்கு 100 மில்லியன் டொலர் செலவில் மும்பையில் உள்ள ஆண்டலியா இல்லத்தில் நடைபெற்றது.

திருமணத்திற்கு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பாலிவுட் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். சங்கீத் நிகழ்ச்சி தொடங்கி திருமணம், வரவேற்பு என அம்பானி வீட்டு திருமணம் கடந்த 4 நாட்களாக நடந்து வந்தது.

அம்பானி மகள் இஷா அம்பானிக்கு புகுந்த வீட்டு பரிசாக அவரது மாமியாரும், ஆனந்த் பிராமலின் தாயாருமான ஸ்வாதி பிராமல் ரூ.2 கோடி மதிப்பிலான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காஸ்ட்லி ஜாக்கெட் பரிசாக அளித்துள்ளார்.

இந்த ஜாக்கெட் முழுக்க முழுக்க தங்கத்தில் ஆனதாகும்.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers