நேரத்திற்கு பசிக்கவில்லையா? இது காரணமாக இருக்கலாம்

Report Print Santhan in உணவு
155Shares
155Shares
ibctamil.com

அதீத பசி என்று சொன்னால் பிரச்சனைக்குறிய விஷயமாக இருந்தது ஆனால் இன்றைக்கு பசியின்மை அந்த இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது.

தொப்பை, உடல் எடை அதிகரிப்பது ஆகியவை முக்கியப் பிரச்சனைகளாக இருக்கின்றன என்றால் அவற்றை தீர்க்கிறேன்,குறைக்கிறேன் என்று களத்தில் குதித்து வேறு சில பிரச்சனைகளையும் உருவாக்கி வருகிறார்கள்.

  • பசியெடுக்கவில்லை என்றால் உணவு சாப்பிடத்தோன்றாது. உணவு சாப்பிடவில்லை எனில் நம் உடல் எடை அதிகரிக்காது என்ற தவறான எண்ணத்தில் உணவு சாப்பிடாமல் தவிர்க்க முடிகிறதே என்று இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கின்றனர். இது பெரும் தவறாகும்.
  • நம் உடல் சீராக இயங்குவதற்கு எனர்ஜி தேவை, அந்த எனர்ஜி நாம் சாப்பிடுகிற உணவு மூலமாகவே கிடைக்கிறது.அதனால் பசியின்மை பிரச்சனைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். என்ன காரணத்தால் பசியின்மை ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டியது அவசியம்.
  • அளவுக்கு அதிகமன மன அழுத்தம் இருந்தால் உங்களுக்கு பசிக்காது. நம் வீடுகளில் கூட சொல்லக் கேட்டிருப்போம், அல்லது நாமே கூட செய்திருப்போம் கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் இருப்பது இதனால் தான். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் உங்கள் மூளையிலிருந்து பல கெமிக்கல்கள் வெளியிடப்படும் அவற்றில் ஒன்று தான் அட்ரலீன்.
  • நீங்கள் சாப்பிடுகிற சில மருந்துகளின் பின் விளைவுகளினால் கூட உங்களுக்கு பசியின்மை பிரச்சனை ஏற்படலாம். குறிப்பாக ஆண்ட்டிபயாடிக்ஸ், ஆண்டி பங்கல்,மைக்ரேன்,ரத்த அலுத்தம்,பார்கின்சன் நோய் போன்றவற்றிற்கு எடுக்கும் மருந்துகள் பசியின்மையை ஏற்படுத்தும்

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்