ஏழே நாட்களில் இரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டுமா? இதை சாப்பிடுங்கள்

Report Print Jayapradha in உணவு

இயற்கையாகவே நமது உடலில் உள்ள ரத்தம் சுத்திரிக்கப்பட்டாலும், நாம் உண்ணும் சிலவகை உணவுகளால் அது அசுத்தமாகி விடுகிறது.

எனவே உடலில் உள்ள ரத்தத்தை எந்த உணவுப் பொருட்களின் மூலமாக சுத்தம் செய்ய முடியும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

அவகேடோ பழம்

ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, ரத்த நாளங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளும். இதற்கு காரணம் அவகேடோ பழத்தில் உள்ள க்ளுடாதியோன் தான். மேலும், இது புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களை வெளியேற்ற உதவும்.

காலிஃபிளவர்

காலிஃபிளவர் போன்று பச்சை நிறத்தில் இருக்கும் ப்ராக்கோலி, பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம் ஆகியவற்றை கொண்டுள்ளது. எனவே இது கல்லீரல் நொதிகளைத் தூண்டி, ரத்தத்தை சுத்தம் செய்து, கார்சினோஜென்களை வெளியேற்றும் பணியை செய்யும்.

ஆப்பிள்

ஜலதோஷத்தில் இருந்து நிவாரணம் தரும். இது, அஜீரணத்தைக் குறைத்து, ரத்தத்தை சுத்தம் செய்யும். ஆப்பிளின் தோலில், பெக்டின் எனும் நார்ச்சத்து உள்ளது. இது உடலில் இருந்து கனமான மெட்டல் பொருட்களை வெளியேற்றும்.

பூண்டு

பூண்டில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. பூண்டில் உள்ள அல்லிசின் எனும் பொருள், ரத்தத்தை சுத்தம் செய்யும் வேலையைச் செய்கிறது. பூண்டை உணவில் சேர்ப்பதோடு, தினமும் ஒன்றை பச்சையாக சாப்பிட வேண்டும்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியில் பழத்தில் ஆண்டி-ஆக்ஸிடண்டுகள் ஏராளமாக உள்ளதால், இதனை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் குறையும், சரும ஆரோக்கியம் மேம்படும், சரும புற்றுநோய் வருமும் அபாயமும் குறையும்.

பச்சை இலைக் காய்கறிகள்

இவற்றில் ஏராளமான அளவில் குளோரோபில் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை உறிஞ்சி வெளியேற்ற உதவும். மேலும், இவை கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுவதால், இவற்றை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம்.

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால், ரத்தம் உறைவது தடுக்கப்பட்டு உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

கேரட்

கேரட் ரத்தத்தைச் சுத்தம் செய்ய உதவும். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நல்லது. இதனை சாறெடுத்து குடிப்பது மிகவும் சிறந்தது.

பீட்ரூட்

பீட்ரூட்டில் ஆண்டி-ஆக்ஸிடண்டுகள் அதிகமாகவும், வைட்டமின்கள் ஏ, சி, மக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து போன்றவைகள் ரத்தத்தை சுத்தம் செய்து, உடல் முழுவதும் சிறப்பாக ஓட விட உதவும்.

கிரேப்ஃபுரூட்

கிரேப்ஃபுரூட் பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருட்கள் உள்ளது. இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் கல்லீரல் சுத்தமாவதோடு, இரத்தமும் சுத்தமாகும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers