உடல் பருமனால் கவலையா? அப்போ இதையெல்லாம் டிரை பண்ணுங்க

Report Print Jayapradha in உணவு

நம் உடம்பில் உள்ள கல்லீரல்கள் தான் கொழுப்புகளை உற்பத்தி செய்கிறது, அளவுக்கு அதிகமான கொழுப்புகள் உடலில் சேரும் போது உடல் பருமன் ஏற்படுகிறது.

உடல் பருமனுக்கான காரணங்கள்

அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல், மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது.

வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும் கூட உடல்பருமனுக்குக் காரணங்கள். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும்.

மேலும் கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம் மன அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

உடல் பருமன் பிரச்சனையால் ஏற்படும் நோய்கள்

நமக்கு அதிகப்படியான உடல் எடை அதிகரித்து விட்டால், ரத்த அழுத்தம், இதயம் படபடப்பு, கல்லீரல் பாதிப்பு, பித்த குறைபாடு, நீரிழிவு, மூட்டு வலி, மனச்சிதைவு, சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவை உடல் பருமனால் ஏற்படும்.

இதுவே பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினை, மார்பக புற்றுநோய், இடுப்பு, கை, கால், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

உடல் பருமனை குறைக்க உதவும் எளிய மருத்துவம்

இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிடுவதால் உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.

சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை ஆகியவற்றை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறையும்.

பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்தினால் விரைவில் உடல் எடை குறையும்.

எலுமிச்சைச் சாற்றில் விட்டமின் C இருப்பதால், ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் சம அளவு தேன் சேர்த்து கலந்து ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

தினமும் சாப்பிடக் கூடிய உணவுப் பொருட்கள்

உடல் பருமனை குறைக்க விரும்புவோர்கள் தனது அன்றாட உணவாக தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர். போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.

சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள்

உடல் பருமனாக இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளான இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.

குறிப்பு

உணவுகளை பின்பற்றுவதுடன் மட்டுமில்லாமல் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், போன்ற உடலுக்கு ஆரோக்கியமான பயிற்சிகளை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers