வயிறு உபாதைகள் போக்கும் புதினா இஞ்சி ரசம் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

அஜீரண கோளாறு, வயிறு உபாதைகள் உள்ளவர்கள் புதினா இஞ்சி ரசம் செய்து சாப்பிட்டு வரலாம்.

இது உடலுக்கு மிகுந்த சக்தியினை தருகின்றது.

இந்த ரசத்தை சூப் போன்று அருந்தலாம். தற்போது இந்த சத்து மிகுந்த ரசத்தினை எப்படி தயாரிப்பது என்பதை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • புதினா - கால் கப்
  • இஞ்சி - ஓர் அங்குலத் துண்டு
  • மோர் - 3 கப்
  • கடுகு, ஓமம் - தலா ஒரு டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை

புதினாவை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை தோல் சீவி, சிறிதளவு நீர் விட்டு அரைத்து, வடிகட்டி, சாறு எடுத்துக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சுத்தம் செய்த புதினாவை போட்டு வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

அதனுடன் மோர், உப்பு, ஓமம், பெருங்காயத்தூள், இஞ்சிச் சாறு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்த வைத்த கலவையை ஊற்றி கொதி வரும் முன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்