சுவையான ஆட்டு ரத்த பொரியல் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

பழங்கால கிராமத்து சமையிலிருந்து ஆட்டு ரத்த பெரியலுக்கு என்றே தனி சிறப்பே உள்ளது.

அந்தவகையில் தற்போது சுவையான இந்த ஆட்டு ரத்த பெரியலை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • ஆட்டு ரத்தம் – 1 கப்
  • சின்ன வெங்காயம் -150 கிராம்
  • வர மிளகாய் – 3
  • சீரகம் – 2 டீ ஸ்பூன்
  • கடுகு – 1 டீ ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • தேங்காய் துருவல் – அரை கப்
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • எண்ணெய் - 2 மேசைகரண்டி
செய்முறை

இரத்தத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி பின்னர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றவும். அதில் உப்பு போட்டு நன்றாக கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அத்துடன் வரமிளகாயை கிள்ளி போடவும்.

நன்கு வதங்கிய உடன் அதில் பிசைந்து வைத்துள்ள ரத்தத்தை ஊற்றி நன்கு கிளறவும். அடுப்பை மிதமாக எரிய விடவும். ரத்தம் தண்ணீர் வற்றி நன்கு உதிரி உதிரியாக ஆகும் வரை கிளறவும்.

அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்பாக தேங்காய் துறுவல் போட்டு கிளறி இறக்கவும். ஆட்டு ரத்தப் பொரியல் தயார்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்