ஜேர்மனி அணியில் மீண்டும் இணைந்த மானுல் நுவர்

Report Print Kabilan in கால்பந்து
236Shares
236Shares
lankasrimarket.com

உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான ஜேர்மனி அணியில் கோல் கீப்பர் மானுல் நுவர் இடம் பிடித்துள்ளார்.

21வது உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடர், வருகிற 14ஆம் திகதி ரஷியாவில் தொடங்க உள்ளது. இதற்கான 23 பேர் கொண்ட ஜேர்மனி அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

கோல் கீப்பர் மானுல் நுவர் மீண்டும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக, எந்த போட்டியிலும் விளையாடாமல் இருந்தார் நுவர்.

இந்நிலையில், ஆஸ்திரியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கடந்த வாரம் விளையாடினார். அதனைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஜேர்மனி அணியில் தாக்குதல் ஆட்டத்தில் சிறந்த நடுகள வீரரான லராய் சானே, உலகக் கிண்ண கால்பந்து அணியில் இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

மேலும், ‘F' பிரிவில் இடம் பிடித்துள்ள ஜேர்மனி அணியில் கோல் கீப்பர் பெர்ட் லினோ, முன்கள வீரர் நில்ஸ் பீட்டர்சன், பின்கள வீரர் ஜோனதன் ஆகியோருக்கும் இடம் கிடைக்கவில்லை.

நடப்பு சாம்பியனான ஜேர்மனி அணி, பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரியாவிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்