இறந்துபோன உயிர் நண்பனின் நினைவாக குரோஷியா கோல்கீப்பர் செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Deepthi Deepthi in கால்பந்து

குரோஷியா கால்பந்து அணியின் கோல் கீப்பர் டேனிஜல் சுபாஷிக், உயிரிழந்த தனது நண்பனின் நினைவாக அவர் அணிந்திருக்கும் ஜெர்சிக்குள் மற்றொரு டி - ஷர்ட் அணிந்து விளையாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2008ம் ஆண்டு ஜடார் என்ற உள்ளூர் அணிக்காக முதல்தர போட்டிகளில் தனது நண்பர் கஸ்டிக்குடன் இணைந்து விளையாடியுள்ளார். அப்போது ஒரு ஆட்டத்தில் பந்தை எடுக்கச் சென்றபோது, கஸ்டிக் தலையில் எதிர்பாராதவிதமாக பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து சிகிச்சை பெற்றுவந்த கஸ்டிக் சிறிது நாட்களுக்குப் பின் உயிரிழந்துவிட்டார். அவரது உயிரிழப்பால் மிகவும் மனமுடைந்து போன சுபாஷிக் நீண்ட நாள்களுக்குப் பின் அத்துயரில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

எனினும், தனது நண்பனை மறவாத வண்ணம் அன்று முதல் தான் பங்கேற்கும் போட்டிகளின் போதெல்லாம் கஸ்டிக் படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

டி -ஷர்ட் மட்டுமில்லாமல் அவன் எப்போதும் என் இதயத்தில் இருக்கிறான் எனக் கூறி நெகிழவைத்துள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்