சிந்துஜனின் அபார ஆட்டத்தால் வவுனியா வொறியஸை வீழ்த்திய மன்னார் FC

Report Print Samaran Samaran in கால்பந்து
சிந்துஜனின் அபார ஆட்டத்தால் வவுனியா வொறியஸை வீழ்த்திய மன்னார் FC

சிந்துஜனின் அற்புதமான கோலின் மூலம் வவுனியா வொறியஸ் அணியை தோற்கடித்து தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது மன்னார் குஊ அணி.

வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்ட தொடர் மிகச் சிறப்பாக துரையப்பா விளையாட்டு மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்று வருகின்றது.

இதில் நேற்று முந்தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மன்னார் குஊ அணியை எதிர்த்து வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வவுனியா வொறியர்ஸ் அணி மோதியது.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் எதிரணியின் கோல் போடும் பரப்புக்களை அடிக்கடி ஆக்கிரமித்த வண்ணம் கோல் போடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனாலும் பின்கள வீரர்களின் சிறப்பான தடுப்பாட்டத்தினால் கோல்போடும் வாய்ப்புக்கள் தடுக்கப்பட்டன.

இந்த சந்தர்ப்பத்தில் மன்னார் அணி வீரர் சிந்துஜன் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தினை சரியான முறையில் பயன்படுத்தி முதலாவது கோலினை தனது அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

இதனால் முதல் பாதி ஆட்டத்தில் மன்னார் குஊ அணி 01:00 என முன்னிலை வகித்தது.

2ஆம் பாதி ஆட்டம் தொடர்ந்தவேளை வவுனியா வொறியர்ஸ் அணி கோல் போடும் உத்வேகத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் கோல் போட முடியாமல் திணறினர்.

இவ் அணியின் முன்கள வீரர்களின் சிறப்பான உதைகள் கோல்கம்பத்தை நெருங்கி சென்ற போதும் கோல்காப்பாளரின் சாதுரியத்தால் கோல் போடும் வாய்ப்புக்கள் தடுக்கப்பட்டன.

இறுதியில் 01:00 என்ற கோல்கணக்கில் மன்னார் குஊ அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியின் சிறப்பாட்ட நாயகனாக மன்னார் குஊ அணியின் சிந்துஜன் தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers