பாரிஸில் புலம்பெயர் வாழ் கலைஞர்களின் மாபெரும் கலை சங்கமம்

Report Print Nesan Nesan in பிரான்ஸ்

பிரான்ஸ் - பாரிஸ் நகரில், ஈழத் தமிழ்க் கலைஞர்களின் ஒன்றிணைந்த கலை நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வானது எதிர்வரும், 2ம் திகதி மாலை 3 மணியளவில், 124 Bis Rue du Bagnolet- 75020 Paris என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், தாயக - புலம்பெயர் வாழ் இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், அணியிசைக் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து நிகழ்வை சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் சுவிஸ் சுப்பர் மெலோடிஸ் இசைக் குழுவினரின் இசையில் பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ், நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த தாயக-புலம்பெயர் பிரபல பாடகர்களின் சிறப்பு இன்னிசை நிகழ்வும் இடம்பெறவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்