பாரீஸ் விமான நிலையம் மூடல்: அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட பயணிகள்

Report Print Santhan in பிரான்ஸ்

பாரீசில் உள்ள முக்கிய விமான நிலையம் ஒன்று பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள Orly விமானநிலையத்தில் வழக்கம் போல பயணிகள் விமானநிலையத்தில் காத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது விமானநிலையத்தில் கேட்பாரற்று ஒரு மர்ம பை இருந்துள்ளது.

இதன் காரணமாக விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமானநிலையத்திற்கு வந்த இராணுவ அதிகாரிகள் அங்கிருந்த பயணிகளை அவசர அவசரமாக வெளியேற்றி வருகின்றனர்.

ஏனெனில் மர்மப் பையில் வெடிபொருட்கள் அல்லது வேறு ஏதும் ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்கள் இருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக பயணிகளை வெளியேற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் விமான நிலையத்தில் உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு காரணமாக விமானநிலையத்தை இராணுவவீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதே விமானநிலையத்தில் தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நபர் ஒருவர், பெண் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பிடிங்க முயற்சி செய்த போது பொலிசார் அவரை துப்பாக்கியால் சுட்டனர். அந்த நபர் அந்த இடத்திலே உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments