300 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஈபிள் டவர் சாதனை: வைரலாகும் சிறப்பு வீடியோ

Report Print Raju Raju in பிரான்ஸ்
520Shares
520Shares
Seylon Bank Promotion

300 மில்லியன் பார்வையாளர்கள் இதுவரை ஈபிள் டவரை பார்த்துள்ள நிலையில், அந்த நிகழ்வானது சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகரம் பாரீஸில் உலக புகழ்பெற்ற நினைவுச்சின்னமான ஈபிள் டவர் அமைந்துள்ளது.

இது கடந்த 1889-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. தற்போது 300 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்த நினைவுச்சின்னம் என்ற பெருமையை ஈபிள் டவர் பெற்றுள்ளது.

இதை கொண்டாடும் வகையில் விதவிதமான நிறங்களில் சிறப்பு விளக்குகள் ஈபிள் டவரில் ஜொலித்தன.

மேலும், ஈபிள் டவரில் நுழைந்த முதல் 1500 பேரிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

முதல் மாடியில் பாடல்கள் ஒலிபரப்பபட்டு பலரும் நடனம் ஆடி மகிழ்ந்தார்கள். இரண்டாம் மற்றும் மேல் மாடியிலும் கொண்டாட்டங்கள் களைகட்டியது.

கடந்த வருடம் மட்டும் 5.8 மில்லியனுக்கு அதிகமானோர் ஈபிள் டவரை பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்