அலுவலகத்தில் நுழைந்து பத்திரிக்கையாளரை சுட்டவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த பிரான்ஸ்

Report Print Kabilan in பிரான்ஸ்
87Shares
87Shares
lankasrimarket.com

பிரான்ஸை சேர்ந்த Abdelhakim Dekhar என்பவர், கடந்த 2013ஆம் ஆண்டு பத்திரிக்கை அலுவலகத்தில் நுழைந்து பத்திரிக்கையாளரை சுட்டதற்காக 25 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

தற்போது 52 வயதாகும் Abdelhakim Dekhar, கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம், செய்தி தொலைக்காட்சி ஒன்றில் நுழைந்து, புகைப்பட கலைஞர்

Philippe Antoine-ரை தனது கைத்துப்பாக்கியின் மூலமாக சுட்டுள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக Philippe உயிர் தப்பவே, ’அடுத்தமுறை தவற விட மாட்டேன்’ எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

எனினும், Philippe அந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தார். இந்நிலையில் Dekhar மீது திட்டமிட்ட கொலை முயற்சி என வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைதானார்.

நீதிமன்ற விசாரணையில் Dekhar-க்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர் ஏற்கனவே, 1990களில் Dekhar, Bonnie மற்றும் Clyde என்னும் கூட்டத்தினருடன் சேர்ந்து, பல வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தியதற்காக கைதானவர் ஆவார்.

மேலும், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரான்சின் பிரபல பத்திரிகையில் ஒன்றான சார்லி ஹெப்டோ வளாகத்தில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 12 கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்