பிரான்ஸ் அணு உலையில் திடீர் புகை: ஊழியர்கள் பதற்றம்

Report Print Gokulan Gokulan in பிரான்ஸ்
150Shares
150Shares
ibctamil.com

அணு உலையில் ஏற்பட்ட திடீர் புகையினால் ஊழியர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் பிரான்ஸில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிடப் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது திடீரென ஏற்பட்ட புகையால், மூச்சுத்திண்றல் ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

எண்ணெய் வெப்பமடைந்ததால் இந்த புகை ஏற்பட்டதாக கூறிய அதிகாரிகள் அதற்கு மேல் கூற மறுத்துவிட்டனர்.

இந்த European Pressurised Reactor(EPR) அணு உலையில் ஏற்கனவே இருந்த இரண்டு அணு உலைகளுடன் இணைத்து மேம்பட்ட உலகச்சிறப்பு வாய்ந்த அணு உலையாக மாற்றும் முயற்சியில் கட்டிடப் பணிகள் நடந்து வந்துள்ளது.

தென்கிழக்கு பிரட்டனில் இரண்டு அணு உலைகள் சீன நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்த முறையில் கட்டியமைக்க திட்டமிடப்பட்ட நிலையில் Flamanville திட்டம் மட்டும் சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தாமதமாக நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின் கட்டுமாணப் பணிகளின் மதிப்பு தற்போது மும்மடங்காக $12.4 billion ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த கட்டுமாணப் பணிகள் 2007-2012 காலக்கட்டங்களில் முடிக்க திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்