ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸில் கொல்லப்பட்ட குடும்பம்: கிடைத்த முக்கிய தகவல்

Report Print Raju Raju in பிரான்ஸ்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானிய குடும்பம் பிரான்ஸில் கொல்லப்பட்ட நிலையில் அந்த வழக்கை மீண்டும் பிரான்ஸ் பொலிசார் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

பிரான்ஸின் அன்னேசி நகரில் கடந்த 2012 செப்டம்பரில் பிரித்தானியாவை சேர்ந்த சாத் அல்-ஹில்லி, அவரின் மனைவி, மாமியார் மற்றும் இரண்டு நண்பர்கள் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் ஈராக்கை சேர்ந்த நால்வர் அடங்கிய குடும்பம் அதிர்ஷ்டவசமாக தப்பித்தனர்.

சம்பவம் குறித்து பிரான்ஸ் பொலிசார் விசாரித்து வந்த நிலையில் கொலையாளிகள் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஆர்தர் நோயர் (24) என்ற ராணுவ வீரர் கடந்த ஏப்ரலில் கொல்லப்பட்டார், அதே போல மயாலிஸ் டி அரவ்ஜோ (8) என்ற சிறுமியும் ஏப்ரலில் கொல்லப்பட்டார்.

ஒன்பது வயது சிறுமி ஒருவர் அதே மாதத்தில் காணாமல் போனார். இந்த வழக்குகளில் தொடர்புடைய முன்னாள் ராணுவ வீரரான நோர்த்தல் லெலாண்டஸ் (34) என்பவரை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.

இவர் தான் கடந்த 2012-ல் பிரித்தானிய குடும்பத்தையும் கொன்றிருப்பார் என்ற சந்தேகம் பிரான்ஸ் பொலிசாருக்கு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நோர்த்தலிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆனாலும் இதுவரை அதற்கான ஆதரங்கள் அவர்களுக்கு கிடைக்காத நிலையில் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நோர்த்தல் மறுத்து வருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்