பொலிஸ் செய்த செயல்.. ரோட்டில் தீப்பற்றி எரிந்த இளைஞர்... அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in பிரான்ஸ்
277Shares
277Shares
lankasrimarket.com

பிரான்ஸில் சாலையில் இளைஞர் ஒருவர் மீது திடீரென தீப்பற்றிய நிலையில் பொலிசார் அதை உடனடியாக அணைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

நாட்டின் பாரீஸில் நகரில் கடந்த 2013-ல் எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

அதில், வெறும் உடலுடன் கையில் ரத்தக்கறை இருக்கும் இளைஞர் உள்ளார். அந்த இடத்தில் பொலிசாரும் பொலிஸ் வாகனங்களும் உள்ளன.

ஏதோ கத்தி கொண்டே செல்லும் அவரை பொலிசார் தடுக்கின்றனர். மீண்டும் அங்குமிங்கும் இளைஞர் உலாத்தியதால் அவரை கைது செய்ய முடிவெடுத்த ஒரு பொலிஸ் மின்சார ஷாக் கொடுக்கும் லத்தியால் இளைஞரை அடிக்கிறார், அப்போது இன்னொரு பொலிஸ் அவர் மீது கண்ணீர்புகையை வீச திடீரென இளைஞர் மீது தீப்பற்ற தொடங்கியது.

இதையடுத்து உடனடியாக பொலிசார் தீயை அணைப்பது போல வீடியோவில் உள்ளது.

இது குறித்து பொலிஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், வீடியோவில் தோன்றிய இளைஞருக்கு பெரியளவில் காயம் ஏற்படவில்லை.

சம்பவத்தில் தொடர்புடைய பொலிசாரிடம் இது குறித்து விசாரிக்கப்பட்ட நிலையில் அவர்களில் யார் மீதும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

வீடியோவை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்