பிரான்சில் ஜனாதிபதியின் புதிய புலம்பெயர்தல் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

புலம்பெயர்தல் தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் கொண்டுவர முயற்சிக்கும் புதிய சட்டம் ஒரு அடக்குமுறைச் சட்டம் என்று கூறி வலது சாரியினரும், தொண்டு நிறுவனங்களும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வலது சாரிகள் மேக்ரான் அதிகம் பயப்படுவதாகவும், தொண்டு நிறுவனங்களோ தாங்கள் இச்சட்டத்தையே திரும்பப்பெற கோருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மசோதாவில் மாற்றங்கள் கொண்டுவருவதைப் பற்றியெல்லாம் நாங்கள் பேசவில்லை, இது ஒரு அடக்குமுறைச் சட்டம், அது திரும்பப் பெறப்படவேண்டும் என்றே கோருகிறோம் என Cimade charity என்னும் புலம்பெயர்ந்தோருக்காக வேலை செய்யும் தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.

இச்சட்டம் புகலிட விண்ணப்பங்களின் காத்திருப்புக் காலத்தை 11 மாதங்களிலிருந்து ஆறு மாதங்களாகக் குறைக்கும், அதே நேரத்தில் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்புவோருக்கு உதவி செய்யும்.

புலம்பெயர்ந்தோர் காத்திருப்பு மையங்களில் 90 நாட்கள் வரை வைக்கப்படுவார்கள், இதுகுறித்து நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்வதும் கடினமாகும்.

இந்த மசோதா குறித்து கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் Gerard Collomb, இது ஒரு சமநிலையான மசோதா, பிரான்சு நாடு அகதிகளை வரவேற்கிறது, அதே நேரத்தில் பொருளாதார புலம்பெயர்வோருக்கு இங்கு இடமில்லை என்றார்.

பொருளாதார புலம்பெயர்வோர் என்பவர்கள், போர் முதலான காரணங்களுக்காக புலம்பெயராமல் தங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்வதற்காக புலம்பெயர்வோர் ஆவார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்