ஐந்து கைக்குழந்தைகளை கொன்று ப்ரீசரில் அடைத்த கொடூர தாய்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஐந்து குழந்தைகளைப் பெற்று யாருக்கும் தெரியாமல் அவைகளை ப்ரீசரில் அடைத்து வைத்த பிரான்ஸ் நாட்டுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Ramona Hernandez-Canete (37) என்னும் அந்தப் பெண்ணின் ஒரு பதின்ம வயது பிள்ளை தற்செயலாக ஃப்ரீசரைத் திறந்தபோது ஒரு கைக்குழந்தையின் உடல் இருப்பது கண்டு அதிர்ச்சியுற்று தன் தந்தையிடம் தகவல் தெரிவித்தார்.

அவளது தந்தை பொலிசில் புகாரளிக்க பொலிசார் Ramonaவைக் கைது செய்தனர்.

பொலிசார் வீட்டை சோதனையிட்டபோது இன்னொரு ஃப்ரீசரில் இன்னும் நான்கு கைக்குழந்தைகளின் உடல்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

பொலிசார் அந்தக் குழந்தைகளைக் கொன்ற குற்றத்திற்காக Ramonaவையும் குற்றத்தை பொலிசாருக்கு தெரியப்படுத்தாமல் இருந்ததற்காக அவளது கணவரான Juan Carlos Hernandez-Caneteஐயும் கைது செய்தனர்.

Juan, பொலிசாரிடம் தனது மனைவி ஐந்து முறை கர்ப்பமாக இருந்தது தனக்குத் தெரியாது என்று தெரிவித்தார்.

அந்த கிராம மக்களும் அந்தப் பெண் கர்ப்பமாக இருந்தது யாருக்குமே தெரியாது என்று தெரிவித்ததையடுத்து பொலிசார் Juanஐ மட்டும் விடுதலை செய்தனர்.

விசாரணையில் தனது கணவர் தன்னை பாலியல் விருப்பங்களைத் தீர்த்துக் கொள்ளும் ஒரு பொருளாகத்தான் நடத்தினார் என்றும் possessive மற்றும் பொறாமை கொண்டவர் அவர் என்றும் அவள் தனது கணவர்மீது குற்றம் சாட்டினார்.

தனது கணவனை பழி வாங்கத்தான் அவள் குழந்தைகளைக் கோரமாக கொலை செய்தாளா என்பது விசாரணையில்தான் தெரியவரும்.

அவளது வழக்கறிஞர் இந்த வழக்கு குறித்து விவரிக்கும்போது வன்முறையும், கருத்து வேறுபாடுகளும், உணர்வுப்பூர்வ நிகழ்வுகளும் கலந்த குழப்பமான ஒரு வழக்கு இது என்று தெரிவித்தார்.

Ramonaவின்மீது பல குழந்தைகளைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்