பிரான்சில் கத்தரிக்கோலால் இளைஞரை சரமாரியாக தாக்கிய 4 பெண்கள்: அம்பலமான காரணம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
317Shares
317Shares
lankasrimarket.com

பிரான்சில் தங்களை காதலித்து ஏமாற்றியதாக கூறி 4 பெண்கள் இளைஞர் ஒருவரை கத்தரிக்கோலால் சரமாரியாக தாக்கி குற்றுயிராக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த 27 வயது இளைஞரின் உடல் எங்கும் கத்தரிக்கோல் காயங்கள் இருந்துள்ளன. மட்டுமின்றி அவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் குற்றுயிரான நிலையில் மீட்கப்பட்ட இளைஞர் 3 நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

லியோன் பகுதியில் குறித்த இளைஞர் குடியிருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று அவரது குடியிருப்பில் அதிரடியாக நுழைந்த 4 இளம்பெண்கள் குறித்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இளைஞரை கேவலமாக திட்டியுள்ளனர். கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர். ஆனால் தகுந்த நேரத்தில் பொலிசார் வந்து அவரை மீட்டுள்ளனர்.

15 நிமிடங்கள் மட்டுமே அங்கிருந்த அந்த 4 பெண்களும் பொலிசார் வந்து சேரும் முன்னரே மாயமாகியுள்ளனர்.

இணையம் வாயிலாக அறிமுகமான அந்த நான்கு பெண்களையும் ஒரே நேரத்தில் குறித்த இளைஞர் காதலித்து வந்துள்ளார்.

மட்டுமின்றி 4 பேருடனும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஊர் சுற்றவும், உடல் உறவிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் 4 பெண்களும் இணையத்தின் வாயிலாகவே அறிமுகமாக, வெடித்தது பூகம்பம். இதனையடுத்து தங்களை ஆசைகாட்டி மோசம் செய்து வரும் இளைஞருக்கு பாடம் புகட்ட 4 இளம்பெண்களும் முடிவு செய்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது இளைஞர் தரப்பில் புகாராக அளிக்கப்பட்டதை அடுத்து அந்த 4 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்