பிரான்சில் ஆபாச படம் தயாரித்த சவுதி இளவரசர்: வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்சில் ஆபாச படம் தயாரித்து பின்னர் பணம் தராமல் ஏமாற்றிய மறைந்த சவுதி இளவரசருக்கு எதிராக வழக்கு தொடுக்க உள்ளதாக நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சரும் மறைந்த இளவரசருமான Saud al Faisal சொந்த தேவைக்காக பிரான்சில் ஆபாச படங்களை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த நிறுவனத்திற்கு தொகை பாக்கி வைத்துள்ளதாகவும், அதை மீட்க சவுதி அரச குடும்பத்தினர் மீது வழக்கு தொடுக்க இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆபாச படம் தயாரித்தில் இளவரசர் Saud al Faisal தங்களது நிறுவனத்திற்கு சுமார் 90,000 யூரோ அளவுக்கு கடன் பாக்கி வைத்துள்ளதாகவும்,

அதை திருப்பிச் செலுத்த அவரது வாரிசுகள் மறுப்பதாகவும் குறித்த நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தால் குறித்த திரைப்படங்களின் காட்சிகளையும் சமர்ப்பிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இளவரசர் Saud al Faisal பாரிசில் அமைந்துள்ள தமது குடியிருப்பு ஒன்றில் இறக்கும் வரை அடிக்கடி விஜயம் செய்து வந்துள்ளார்.

தற்போது அந்த குடியிருப்பானது இளவரசரின் மகன் மற்றும் மகள்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சவுதியின் பட்டத்து இளவரசர் சல்மான் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் செல்லவிருக்கும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட 40 ஆண்டு காலம் சவுதி அரேபியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருந்த இளவரசர் Saud al Faisal கடந்த 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்