பிரான்ஸில் இரும்புக்கம்பியால் தாக்கிய மர்மநபர்கள்: உயிருக்கு போராடும் இளைஞர்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸின் Toulouse நகரில் மர்மநபர்களால் இரும்புக்கம்பியால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர், உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 24ஆம் திகதி Toulouse நகரில், 30 வயது இளைஞர் ஒருவரை மூன்று அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சுற்றி வளைத்து, இரும்புக் கம்பி ஒன்றால் தாக்கியுள்ளார்.

இச்சம்பவம் அதிகாலை 3 மணியளவில் நடந்ததாக அங்குள்ள கண்காணிப்பு கமெராக்கள் மூலம் பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில், படுமோசமாக தாக்கப்பட்ட குறித்த இளைஞர் உயிருக்கு போராடும் நிலையில், Purpan மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்குரிய காரணம், மர்மநபர் குறித்து அந்நகர பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...