பிரான்சில் சவுதி இளவரசியின் விலையுயர்ந்த நகைகள் திருட்டு! அதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்
521Shares
521Shares
lankasrimarket.com

பிரான்சில் சவுதி இளவரசி தங்கியிருந்த ஹோட்டலில் அவரின் பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர விடுதியான Ritz ஹோட்டலில், உள்ள அறை ஒன்றில் சவுதி இளவரசி தங்கியுள்ளார். ஆனால் அவரின் பெயர் தெரிவிக்கப்படவில்லை.

அப்போது அவரின் சுமார் £700,000(இலங்கை மதிப்பு 14,81,27,399 கோடி ரூபாய்) மதிப்பு கொண்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் கடந்த வெள்ளிக் கிழமை பிற்பகலில் நடந்துள்ளது எனவும் இது குறித்து France's anti-organised crime brigade விசாரணை நடத்தி வருவதாகவும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இதே போன்று இந்த ஹோட்டலில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கொள்ளை கும்பல் ஒன்று, அங்கு ஜுவல்லரி ஷாப்பில் இருந்த சுமார் 4 மில்லியன் யூரோ மதிப்பு கொண்ட நகைகளை திருடிச் சென்றனர்.

அப்போது அவர்கள் தப்பிப்பதற்காக ஓடிய போது, திருடப்பட்ட நகைகள் சில அங்கு சிதறி விழுந்தன. அதை பொலிசார் பத்திரமாக மீட்டனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்