பிரான்ஸ் பாடகரின் அஞ்சலி நிகழ்வு: இம்மானுவல் மேக்ரான் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரெஞ்சு-அமெரிக்க பாடகர் Charles Aznavour-யின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

பிரெஞ்சு- அமெரிக்க பாடகர் Charles Aznavour(94) கடந்த 1ஆம் திகதி காலமானார். இந்நிலையில், இன்று அவருக்கு தேசிய அளவில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு Place des Invalides நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான், ஆர்மேர்னிய நாட்டு பிரதமர் நிகோல் பாசினியன், தேசிய முன்னணி கட்சித்தலைவர் மரீன்-லூ-பென், முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் நடிகர்கள் Jean-Paul Belmondo, Laurent Gerra, பாடகி Mireille Mathieu, ஊடகவியலாளர் மைக்கேல் டிரக்கர் போன்ற பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

மறைந்த Charles Aznavour-யின் குடும்பத்தினர் உட்பட 200க்கும் அதிகமானோருக்கு இந்நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரது பிள்ளைகளான katia, Seda, Charles, Mischa மற்றும் Nicolas ஆகியோர் கலந்துகொண்டனர்.

காலை 10 மணியளவில் தேசிய கீதத்துடன் அஞ்சலி நிகழ்வு ஆரம்பமானது. Charles Aznavour-யின் பெற்றோர் ஆர்மேனிய நாட்டின் குடியுரிமை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Reuters

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்