பிரான்சில் எரிபொருட்களின் பெயர் மாற்றம்! இன்னும் சில நாட்களில் நடைமுறைக்கு வரவிருக்கும் திட்டம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் பெயரில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சில் கடந்த 2014-ஆம் ஆண்டு பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களில் மற்றம் கொண்டு வர திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த திட்டம் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது அதே திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த திட்டம் அக்டோபர் மாதம் 12-ஆம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது. sans-slomb, diesel அல்லது gazole என இருந்த பெயர்களை மொத்தமாக மாற்றி, ஆங்கில மற்றும் பிரெஞ்சு எழுத்துக்களில் இந்த பெயர்கள் குறிப்பிடப்பட உள்ளது.

பெட்ரோலினை E எனும் எழுத்திலும் டீசலினை B எனும் எழுத்திலும் குறிப்பிடப்பட உள்ளன. அதுமட்டுமின்றி பெட்ரோலுக்கு வட்ட வடிவிலான ஒட்டிகளும், டீசலுக்கு சதுர வடிவிலான ஒட்டிகளும் பயன்படுத்தப்படவுள்ளன.

sans-plomb » 95-E10 தரத்தைக் கொண்ட பெட்ரோல் சுருக்கமாக E10 என மாற்றப்பட உள்ளது. sans-plomb 95 மற்றும் 98 ஆகிய தரத்தைக் கொண்ட பெட்ரோல் E5 என மாற்றப்பட உள்ளது.

Superethanol ரக பெட்ரோல் E85 என மாற்றப்பட உள்ளது.

டீசலில், GAZOLE ரக டீசல் B7 எனவும், Futur carburant ரக டீசல் B10 எனவும், Futur carburant ரக டீசல் XTL எனவும் பெயர் மாற்றப்படவுள்ளது.

இந்த பெயர் மாற்றம் பிரான்ஸ் தவிர மற்ற நாடுகளிலும் அறிமுகபடுத்தப்படவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நாடுகளான Iceland, Liechtenstein, Norway, Macedonia, Serbia, Switzerland மற்றும் Turkey ஆகிய நாடுகளிலும் இதே போன்ற பெயர் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவுக்குள் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயர் எரிபொருளுக்கு இருப்பதால், குழப்பத்தை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபர் 12-ஆம் திகதி இந்த பெயர் மாற்றம் நடைமுறைக்கு வரும் என்ற போதும், சில மாதங்களுக்கு அதன் பழைய பெயர்களும் அச்சிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers