பிரான்சில் பொலிஸ் அதிகாரி போல் நடித்து 35 வயது நபர் செய்த செயல்: பல பெண்களை ஏமாற்றியது அம்பலம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் தான் ஒரு பொலிஸ் என்று கூறி, ஏமாற்றி பல பெண்களை பாலில துஷ்பிரயோகம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரான்சைச் சேர்ந்த 35 வயது நபர் தனியாக செல்லும் பெண்களிடம் தான் ஒரு பொலிஸ் என்று கூறி, போலியான காவல்துறையின் அடையாள அட்டையை காண்பித்து, அவர்களிடம் அடையாள அட்டை சோதனை நடத்த வேண்டும் என்று கூறி அழைத்துச் செல்வான்.

அப்படி சோதனைக்காக அழைக்கப்படும் பெண்களை அவன் தனியாக ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளான். குறிப்பாக Rhône, l’Ain , l’Isère ஆகிய பகுதிகளிலே பல பெண்கள் இவனிடம் சிக்கியுள்ளனர்.

இதனால் பொலிசார் இவனை தகுந்த ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து இந்த நபர் லியோனில் வைத்து கைது செய்யப்பட்டான்.

இவனிடம் அனைத்து வயதுப் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியான காவல்துறை சோதனை என்று, கூறி பாலியற் துன்புறுத்தலிற்கு ஆளாகியிருந்தால், brigade de la protection de la famille-க்கு தெரிவிக்குமாறு பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்