பாரிஸ் மாநகரில் நடைபெற்ற தமிழ் பேசும் மாணவ/ மாணவிகளுக்கான ஆங்கில அறிவுப் போட்டி 2018

Report Print Gokulan Gokulan in பிரான்ஸ்

பிரான்சின் பாரிஸ் மாநகரில் தமிழ் பேசும் மாணவ/மாணவிகளுக்கான ஆங்கில அறிவுப் போட்டி கடந்த வருடம் போன்று இந்த வருடமும் சிறப்பாக நடைபெற்றது.

Sruthilaya FineArts School ஆங்கில பாட பிரிவினர், ஐரோப்பாவிலேயே முதன்முறையாக ஆங்கில அறிவிப் போட்டியாகிய Thumbs Up English Challenge இனை மூன்றாவது வருட மாகவும் மிக விமரிசையாக 14/10/2018 அன்று காலை 10:00 மணி அளவில், இரண்டு அமெரிக்க ஆங்கில பேராசிரியர்களான Ms.Catherine Kospitto அவர்கள் முன்நிலையிலும், Mrs.Katrina Huly முன்னிலையிலும் நடத்தியுள்ளார்கள்.

கிட்டத்தட்ட 90 மாணவ/ மாணவிகளை கொண்ட குழுவானது வயது அடிப்படையில் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முறையே,

  • Elementary (2 வயது - 6 வயது)
  • Start Of Beginners (7 - 9 வயது)
  • Beginners (10 - 12 வயது)
  • Intermediate (13 - 15 வயது)
  • Upper Intermediate (16 - 20 வயது)
  • Advanced ( அன்னையர்களுக்குரியது)

ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

மேலும் பலவகைப் போட்டிகள், அதாவது Rhymes, Recitation, Spell Bee,Crosswords, Punctuation writing , Comprehension Writing, Dictation, Speech, Quiz, Show and tell , skit போன்றவை நடைபெற்று, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள், சான்றிதழ்கள், பதக்கங்கள், சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டன.

அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நல்ல முறையில் அமைவதற்கு உறுதுணையாக இருந்த விளம்பரதாரர்களான LANKASRI E-MARKET திரு கஜிநாத் , Salle 5p Star உரிமையாளர் திரு பிரின்ஸ் மரியநாயகம், Point Propre உரிமையாளர் திரு சின்னையா தெய்வேந்திரன்.Samithiriya Bridal Service உரிமையாளர் திருமதி ஆஷா ராபின்சன் ,திரு திருலோகசுந்தரம் சபேசன் NSP SARL உரிமையாளர், திரு சிவகுமார் ஏர்போர்ட் லைன் உரிமையாளர் , திரு ஸ்ரீதர் பாரதி அச்சக உரிமையாளர் , சென்ஸெய் ரவிநாத் SKAF உரிமையாளர் மற்றும் திரு ரதிஷ், திரு அரசன், திரு கந்தசாமி பத்மதீலிபன் மற்றும் Le Blanc Mesnil நடனாலயா கல்லூரி ஆசிரியை திருமதி ரெமில்டா அவர்களுக்கும், Canal Plus தொலைக்காட்சி திருமதி சோனியா ஜான் அவர்களுக்கும் அணைத்து நண்பர்கள் , நலன்விரும்பிகள் எல்லோருக்கும் Thumbs Up English Challenge குழு சார்பாக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கின்றனர் .

மாணவர்களின் வளர்ச்சியானது பலமடங்கு உயர்ந்துள்ளதாக இந்த ஆங்கில அறிவுப்போட்டியை காண வந்த பெற்றோர்களின் கருத்துக்களாக காணப்பட்டது.

மேலும் ஆங்கில ஆசிரியர் தானியா தில்லைராஜா தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு ஜுட் ரிஷான் அவர்கள் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே இசைத்துறையில் பல திறமைமிக்க மாணவர்களை உருவாக்கிவரும் சுருதிலயா கல்லூரி இப்போது ஆங்கிலக் கல்வியிலும் ஆழ காலூன்றியிருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது என்பதையும் இங்கு தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்