திருமணத்துக்கு பின்னர் முதல்முறையாக அம்பானி மகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி: வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in பிரான்ஸ்

திருமணத்துக்கு பிறகு முதல் பொது நிகழ்ச்சியாக பாரீஸில் நடைபெறும் பேஷன் வார நிகழ்ச்சியில் இஷா அம்பானி தனது தாய் நீட்டா அம்பானியுடன் கலந்து கொண்டுள்ளார்.

இந்தியாவின் மிக பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் மகள் நீட்டா அம்பானிக்கும், ஆனந்த பிரமல் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 12-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் முதல் பொது நிகழ்ச்சியாக பாரீஸில் நடைபெறும் பாரீஸ் பேஷன் வார நிகழ்ச்சியில் இஷா கலந்து கொண்டார்.

அவருடன் தாய் நீட்டாவும் பங்கேற்றுள்ளார். இருவரும் அசத்தலான ஆடையணிந்து அனைவரையும் ஈர்த்தார்கள்.

தாயும், மகளும் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers