பாரிஸ் ரயிலில் குழந்தை பெற்றெடுத்த பெண்! ரயில்வேயின் சிறப்பு சலுகை

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் பாரிஸ் நகரில் இருந்து கிளம்பிய ரயில் ஒன்றில் பெண்ணொருவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் நடந்தது.

பாரிசில் இருந்து ஸ்ரார்ஸ்பேர்க் நகருக்கு Ouigo ரெயில் நேற்று முன்தினம் சென்றுகொண்டிருந்தது. அப்போது அதில் பயணம் செய்துகொண்டிருந்த பெண் ஒருவருக்கு பிரசவலி ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, ரயிலில் இருந்த அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் குறித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். இதனால் எந்த சிக்கலும் இன்றி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறந்தது.

SNCF-யின் குறைந்த கட்டண ரயில் சேவையான Ouigo-யில் குழந்தை பிறப்பது இதுவே முதல் முறையாகும். அதனைத் தொடர்ந்து, குழந்தைக்கு கால்பந்தாட்ட வீரர் Kylian-யின் பெயரை சூட்டுவதாக அந்த குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரயில் பிறந்த அந்த குழந்தைக்கு 18 வயது வரை இலவச போக்குவரத்து சேவைகளும் வழங்கப்பட உள்ளதாக SNCF அறிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers