நூற்றாண்டைக் கடந்த அருங்காட்சியகம் பிரான்சில் மீண்டும் திறப்பு!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் Musee Grevin அருங்காட்சியகம் பெரும் மாற்றங்கள் மற்றும் புதிய வடிவமைப்புடன் நாளை மீண்டும் திறக்கப்பட உள்ளது.

பாரிசின் Grands Boulevards-யில் அமைந்துள்ள Musee Grevin அருங்காட்சியகம், 1882ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் திகதி உருவாக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் 137 ஆண்டுகளைக் கடந்து மக்களைக் கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், பெரும் திருத்த வேலைகளுக்காக மூடப்பட்ட Musee Grevin அருங்காட்சியம் தற்போது மீண்டும் திறக்கப்பட உள்ளது. மிகவும் பிரபலமான நட்சத்திரங்களின் தத்ரூபமான மெழுகு பொம்மைகளைக் கொண்ட Musee Grevin-யில் மேலும் புதிதாக 30 பிரபலங்களின் பிரதிமைகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த பிரதிமைகள் வரும் 14ஆம் திகதி முதல் மக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என்றும், புதிய வடிவமைப்புடன் தயாராகியுள்ள இந்த அருங்காட்சியகம் சனிக்கிழமையான நாளை திறக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AFP/VNA/CVN

AFP/VNA/CVN

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers