ஓடுதளத்தில் இருந்து விலகி ஓடிய விமானம்: பனிப்பாறையில் மோதி விபத்து

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்ஸில் பிரபலமான சுற்றுலா தலத்தில் விமானம் ஒன்று தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சம்பவம் நடந்துள்ளது.

பிரான்ஸின் பிரபல சுற்றுலா தலமான Courchevel விமான நிலையத்தில் குறித்த அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது.

தரையிறங்கிய விமானம் ஓடுதளத்தில் வழுக்கிச் சென்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து பனிப்பாறையில் மோதியுள்ளது.

Piper PA-46 என்ற குட்டி விமானமே குறித்த விபத்தில் சிக்கியுள்ளது. விபத்தின் போது அந்த விமானத்தில் 5 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதில் 4 பேர் அந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். அவர்களை உடனடியாக மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஒரு இளம்பெண் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சமீப நாட்களாக Piper ரக குட்டி விமானங்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது. Piper ரக விமானம் ஒன்றே கார்டிஃப் கால்பந்து வீரர் எமிலியானோ சாலாவின் உயிரைப் பறித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers