ஜனாதிபதி மேக்ரான் மீது தாக்குதலா? மீட்கப்பட்ட வெடிபொருட்களால் பரபரப்பு!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் Bastia நகரில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான், நாளை மறுதினம் Bastia நகருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் Corsica தீவில் உள்ள Bastia நகரில், வெடிபொருட்கள் சிலவற்றை நேற்றைய தினம் பொலிசார் மீட்டுள்ளனர்.

இந்த வெடிபொருட்கள் ஒரு சிலமணி நேர இடைவெளிகளில் மீட்கப்பட்டன. ஜனாதிபதி மேக்ரான் பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், வெடிப்பொருட்கள் மீட்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பாரிஸ் நகர பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர். மேக்ரான் பயணம் மேற்கொள்வதை அறிந்து, இரண்டு இடங்களில் அவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers