நாட்ரி டாம் தேவாலயம் பற்றியெரிந்தது தீர்க்கதரிசன நிறைவேறுதலா? பாதிரியாரின் எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

நாட்ரி டாம் தேவாலயம் பற்றியெரிந்தது தீர்க்கதரிசன நிறைவேறுதல் என வேதாகமத்தை மேற்கோள் காட்டி பாதிரியார் ஒருவர் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

856 வருட பழமையான நாட்ரி டாம் தேவாலயத்தின் கூரை திங்களன்று தீப்பற்றியெரிந்ததில் மரத்தால் செய்யப்பட்ட பெரும்பகுதி எரிந்து நாசமானது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதிரியாரான Steve Cioccolant, இந்த சம்பவத்தை வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எருசலேம் தேவாலயம் குறித்த தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலுக்கு ஒப்பிடுகிறார்.

மாற்கு எழுதின சுவுசேஷத்தின் 13 ஆம் அதிகாரத்தில் இயேசு எருசலேம் தேவாலயத்தைப் பார்த்து, இந்த தேவாலயத்தின் ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடிக்கு எல்லாம் நிர்மூலமாக்கப்படும் என்று கூறியதை பாரீஸ் தேவாலயம் எரிந்ததற்கு ஒப்பிடுகிறார் Steve.

இவையெல்லாம் உலகம் அழிவதற்கு முன் அடையாளங்கள் என்று கூறப்பட்டுள்ளதையும் நினைவு கூறுகிறார் அவர்.

அந்த வசனங்கள் எல்லாமே எருசலேம் தேவாலயத்தைக் குறித்து பேசுகின்றன என்றாலும், அவற்றுடன் நாட்ரி டாம் தேவாலயத்தை ஒப்பிடும் Steve, இது பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் நிலையற்ற விசுவாசத்தை காட்டுவதாக இருக்கலாம் என்று கூறுகிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers