வறுமையிலிருக்கும் குழந்தைகளை விட நாட்ரி டாம் தேவாலயம் கட்டுவது முக்கியமா: வறுத்தெடுக்கும் பிரபல நடிகை

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரபல நடிகையும் மொடலுமான பே வாச் புகழ் பமீலா ஆண்டர்சன், வறுமையிலிருக்கும் குழந்தைகளுக்கு உதவுவதை விட தேவாலயம் கட்டுவதற்கு அதிக நன்கொடை குவிந்துள்ளதை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரான்சின் பிரபல கால்பந்து கிளப் ஒன்று ஏற்பாடு செய்திருந்த, தேவையிலிருக்கும் குழந்தைகளுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்ற பமீலா ஆண்டர்சன், நாட்ரி டாம் தேவாலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவதற்காக கோடீஸ்வரர்கள் ஏராளமான நிதி வழங்குவதை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மீண்டும் மீண்டும் பெருந்தொகை தேவாலயம் கட்டுவதற்காக வாக்களிக்கப்படுவதைக் கண்டு கோபமுற்றுள்ள பமீலா ஆண்டர்சன், ஏற்கனவே தேவாலயம் கட்டுவதற்கு ஏராளமாக நிதி கொடுக்கப்பட்டு விட்டது.

இதற்கு மேலும் வாக்களிக்கப்படும் தொகையை தேவாலயம் கட்டுவதற்கு பயன்படுத்துவதற்கு பதில் ஏழ்மை மிக்க Marseille நகரில் வறுமையில் இருக்கும் குழந்தைகளுக்கு பயன்படுத்தலாமே என்கிறார் அவர்.

திரட்டப்பட்ட நிதியிலிருந்து 112,000 டொலர்கள் நாட்ரி டாம் தேவாலயம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டதையடுத்து அதை கடுமையாக விமர்சித்த பமீலா, நிதி திரட்டும் நிகழ்ச்சியிலிருந்து கோபமாக வெளியேறினார்.

பின்னர் ட்விட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ள அவர், தேவாலயம் கட்டுவதற்காக அந்த நிதியை கொடுக்க முடிவெடுத்துள்ளவர்கள், தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்து எங்கு தேவை இருக்கிறதோ அங்கு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். Marseille நகரில் வறுமையில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவுவதற்காகத்தான் நிதி திரட்ட திட்டமிடப்பட்டது.

அதன்படி அந்த நிதியை ஏழைக் குழந்தைகளுக்கு அளித்தால் அவர்களது வாழ்வை சிறப்பாக்க அது உதவும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்