பிரான்சில் ஓட்டுநர் உரிமம் இல்லாத இளைஞர் ஏற்படுத்திய விபத்து! 2 முதியவர்கள் பலியான பரிதாபம்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் ஓட்டுநர் உரிமம் இல்லாத இளைஞர் ஒருவர் ஏற்படுத்திய விபத்தில், இரண்டு முதியவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் Lyon-யின் தெற்கு பிராந்தியமான Venissieux-யில், நேற்று முன்தினம் நடந்த விபத்து ஒன்றில் இரண்டு முதியவர்கள் கொல்லப்பட்டனர்.

கார் ஒன்றை ஓட்டி வந்த 25 வயது இளைஞர் ஒருவர், பாதசாரிகள் நடைபாதையை கடந்துகொண்டிருந்த இரண்டு முதியவர்களின் மீது மோதினார்.

இந்த விபத்தில் குறித்த இரண்டு முதியவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர்களின் வயது 70 மற்றும் 77 என்று தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு முதியவர், அதே நாளில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என தெரிய வந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்