இளவரசி டயானாவிற்காக பிரான்ஸ் அரசு செய்யவிருக்கும் மரியாதை

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

இளவரசி டயானா கார் விபத்தில் இறந்த சுரங்கப்பாதையின் எதிரே உள்ள தங்க நினைவு சின்னத்திற்கு, அவரது பெயரை சூட்ட பாரிஸ் நகர சபை முடிவெடுத்துள்ளது.

பாரிஸ் அல்மா பாலம் அருகே 1997ம் ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தில், இளவரசி டயானா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சுரங்கப்பாதைக்கு எதிரே விபத்துக்குள்ளான இடத்தில் ஒரு தங்க சுடர் நினைவுச்சின்னம் உள்ளது. இதற்கு 1977 ஆம் ஆண்டில் இறந்த புகழ் பெற்ற கிரேக்க பாடகி மரியா கால்ஸின் பெயரிட முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அந்த சமயத்தில் டயானாவின் விபத்து ஏற்பட்டதால், நினைவுச்சின்னத்தின் திறப்புவிழா ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் டயானாவின் பெயரையே அந்த நினைவுச்சின்னத்திற்கு சூட்டிவிடலாம் என பாரிஸ் நகர சபை முடிவு செய்துள்ளது.

பாடகி மரியா கால்ஸிற்கு பாரிஸில் அதிக நினைவு சின்னங்கள் இருப்பதாலும், டயானாவிற்கு அந்த அளவிற்க்கு இல்லை என்பதாலுமே இந்த முடிவினை எடுத்துள்ளனர்.

பிரான்ஸ் அதிகாரிகள் இதற்கு ஏற்கனவே ஒப்புக்கொண்டுவிட்டனர். அடுத்த மாதம் 11 ம் திகதி நகராட்சி மன்றத்தில் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதில் எட்டப்படும் முடிவை வைத்தே டயானாவின் பெயர் மாற்றம் செய்யப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers