ஜப்பான் ஜி20 மாநாட்டில் சர்ச்சைக்குள்ளான பிரிஜித் மேக்ரோனின் ஆடை!

Report Print Kabilan in பிரான்ஸ்

ஜப்பானில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்துகொண்டிருந்த பிரிஜித் மேக்ரோனின் ஆடை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு நாடுகளின் தலைவர்கள், ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பிரிஜித் மேக்ரோன், தனது நீண்ட கால்களை வெளியில் தெரியும் படியான நீல நிற ஆடையை அணிந்திருந்தார்.

இதனை குறிப்பிட்டு சர்வதேச ஊடகங்கள், முழங்காலுக்கு மேல் இருக்கும்படியாக பிரிஜித் மேக்ரோன் ஆடை அணிந்திருந்ததாகவும், மிக உயரமான காலனி அணிந்திருந்ததாகவும் கூறி விமர்சனம் செய்துள்ளன.

பாரிசில் கடந்த வாரம் டென்மார்க் இளவரசரை பிரிஜித் மேக்ரோன் வரவேற்றார். அப்போது அவர் பிங்க் நிற உடை அணிந்திருந்தார். அவர் உடை சர்ச்சையில் சிக்குவது இது 4வது முறையாகும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்