ரஷ்யா கலந்துகொள்ளும் இறுதி மாநாடு.. ஜனாதிபதி புடினை வரவேற்கும் இம்மானுவல் மேக்ரான்!

Report Print Kabilan in பிரான்ஸ்

G7 மாநாட்டிற்கு முன்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் சந்திக்க உள்ளார்.

பிரான்சின் Brégançon நகரில் வரும் ஆகஸ்ட் மாத இறுதியில், G7 மாநாடு நடைபெற உள்ளது. ரஷ்யா இருந்தபோது G8 அமைப்பாக இருந்தது. ஆனால் ரஷ்யா இந்த அமைப்பில் இருந்து விரைவில் விலகிக்கொள்ள இருப்பதால், G7 அமைப்பாக மாறியுள்ளது.

எனவே, இந்த ஆண்டுக்கான இந்த மாநாட்டில் ரஷ்யா இறுதியாக கலந்துகொள்ள உள்ளது. இம்மாநாட்டிற்கு பிரான்ஸ் தலைமை ஏற்கிறது.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இம்மாநாட்டிற்கு முன்பாக பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானை சந்திக்க உள்ளார். ஆகஸ்ட் 24, 25, 26 ஆகிய திகதிகளில் G7 மாநாடு நடக்க உள்ளது.

இதற்கு சில நாட்களுக்கு முன்பாக புடின்-மேக்ரான் சந்திப்பு நடைபெறும் என்று எலிசே மாளிகை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

G7 அமைப்பில் தற்போது பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, ஜப்பான், அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளன.

Philippe Wojazer/AFP/Getty Images

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers