பயண அட்டை இல்லாமல் பிடிபட்ட இளம்பெண்: உதவுவதாக கூறி மோசமான செயலில் ஈடுபட்ட நபர்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் ரயிலில் பயணித்த இளம்பெண் ஒருவர், பயண சலுகை அட்டையை கொண்டு வர மறந்ததால், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அப்போது, தனது மூன்று வயது மகளுடன் உடன் பயணித்த 35 வயது மதிக்கத்தக்க ஒருவர், சக பயணிகளிடம், நாம் அனைவரும் சேர்ந்து அவளுக்கு உதவலாமே என்று கூறியுள்ளார்.

பின்னர் பயணச்சீட்டு பரிசோதகர் அங்கிருந்து நகர்ந்ததும், அந்த நபர், அந்த 17 வயது பெண்ணிடம், கழிவறைக்கு என்னுடன் வா, நீ என்னை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தால், நானே உனக்கு பணம் தந்து உதவுகிறேன் என்று கூறியுள்ளார்.

அதிர்ந்து போன அந்த இளம்பெண், உடனடியாக பயணச்சீட்டு பரிசோதகருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

பயணச்சீட்டு பரிசோதகர் பொலிசாருக்கு தகவலளிக்க, Angers நகர ரயில் நிலையம் ஒன்றில் ரயில் நிற்கவும், தயாராக இருந்த பொலிசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.

பின்னர் அந்த நபர் எக்கச்சக்கமாக மது அருந்தியிருந்ததும், ஒரு லிட்டர் இரத்தத்திற்கு, ஒரு கிராமுக்கும் அதிகமான ஆல்கஹால் அவரது உடலில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு இரவு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்ட அந்த நபர், மறுநாள் விடுவிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பாலியல் துன்புறுத்தல் சட்டம் ஒன்றின்படி, அவர் 1,500 யூரோக்கள் அபராதம் கட்ட வேண்டும்.

இதற்கிடையில் தான் கூறியதை அந்த இளம்பெண் தவறாக புரிந்துகொண்டதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்