பிரான்சில் சோதனையில் ஈடுபட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி... சூட்கேஸில் கண்ட காட்சி

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரின் காரை பொலிசார் சோதனை மேற்கொண்ட போது, அதன் உள்ளே இருந்த சூட்கேஸில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

நேற்று Haute-Savoie நகரின் Doussard எனும் சிறு கிராமத்தின் வீதி ஒன்றில் பொலிசார் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அதிகாலை 5 மணிக்கு சந்தேகத்தின் அடிப்படையில் கார் ஒன்றை பொலிசார் தடுத்து நிறுத்தினர். அதில் டிரைவர் சீட்டில் ஒரு நபரும், பின் இருக்கையில் சுமார் ஆறு மற்றும் 7 வயதுடைய பெண் குழந்தைகள் இருந்தனர்.

அப்போது அவர்களின் முகத்தில் ஒரு வித பயம் மற்றும் குழப்பம் இருந்ததால், சந்தேகமடைந்த பொலிசார், காரை முழுவதுமாக சோதனையிட்டனர்.

அதில், பின்பக்கத்தில் இருந்து சூட்கேஸ் ஒன்றை திறந்து பார்த்த போது, பெண் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் அந்த நபரிடம் விசாரித்த போது, அது அவரின் மனைவி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers